tamilnadu

img

ஓட்டுநர் உரிமம்-புதுப்பித்தல் ஜூன் வரை நீட்டிப்பு

சென்னை, மார்ச் 31- பிப்ரவரி ஒன்றாம் தேதியுடன் முடிந்த வாக னங்களுக்கான அனுமதி, ஓட்டுநர் உரிமம் ஆகிய வற்றை புதுப்பிக்க ஜூன் 30ஆம் தேதி வரை கால  அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும்   நிதியாண்டு நீட்டிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் குறித்து  மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. நடப்பு நிதியாண்டு வரும்  ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக சில ஊட கங்களில் வெளியான செய்திக்கு மத்திய நிதித் துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்திய முத்திரைச் சட்டத்தில் செய்யப்பட்ட வேறு சில திருத்தங்கள் தொடர்பான அறிவிப்பு  சில ஊடகங்களில் தவறாக குறிப்பிடப்பட்டுள்ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதியாண்டு வழக்கம்போல் மார்ச் 31ஆம் தேதி யும் முடிவடைவதாகவும், நீட்டிக்கப்படவில்லை என்றும் நிதித்துறை அமைச்சகம் சார்பில் விளக்கம்  அளிக்கப்பட்டுள்ளது.