tamilnadu

img

இது சோதனைக் காலம்

அரசமைப்பு, ஜனநாயகம், நீதித்துறை, மனிதர்களுக்கு இது சோதனைக் காலம்

நீதிபதி  கே.சந்துரு பேச்சு

கொச்சி, டிச.28- அரசமைப்பு சாசனமும் ஜனநாய கமும் நீதித்துறையும் மனிதர்களும் சோதனைகளின் ஊடாக கடந்து செல்லும் காலம் இது எனவும், நாட் டின் நிலைமை அறிவிக்கப்படாத அவ சரநிலைக்கு ஒத்ததாகும் எனவும் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு கூறினார். கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் 13ஆவது அகில இந்திய மாநாட்டை துவக்கி வைத்து அவர் மேலும் பேசியதாவது:  சிஏஏ என்ஆர்சி குறித்து மக்கள் மத்தியில் போதிய தெளிவு உள்ளதாக தேன்றவில்லை. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேச இந்துக் களை ஏற்க தயாராகும்போது இலங்கை இந்துக்கள் குறித்து எதுவும் கூற வில்லை. வழக்கறிஞர்கள் என்கிற நிலையில் இந்த சட்டங்களின் பின்ன ணியில் உள்ள ஜனநாயக- அரச மைப்பு சாசன விரோதம் குறித்து மக்க ளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண் டும்.

ஆறு ஆண்டுகளுக்கு இடையில் 92 லட்சம் வேலை இழப்பு குறித்து யாரும் பேசுவதில்லை. 2020 க்கு கடந்து செல்லும்போது இங்கு மக்க ளும் மோடியும் அமித் ஷாவும் 2020 போட்டி நடத்துகிறார்கள். காஷ்மீர் பிரச்சனை எழுந்தபோது நீதிமன்றம் மக்களிடம் காத்திருக்குமாறு கூறி யது. எவ்வாறு ஒருவரது மனித உரி மைகள் மீறப்படும்போது காத்திருக்கு மாறு நீதிமன்றத்தால் கூற முடியும். நீதிமன்றங்கள் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு களை மாற்றுகின்றனவா என்று சந்தே கம் எழுப்ப வேண்டும். மக்களுக்காக அல்ல சில தீர்ப்புகள் ஆட்சியாளர் களுக்காக கூறப்படுவதாக தோன்று கிறது. அசாமில் கட்டப்பட்டுள்ளது போன்ற தடுப்பு மையங்கள் நாடு முழு வதும் பரவ வேண்டும் என்பதே மோடி யின் முயற்சி என கூறினார். எர்ணாகுளம் டவுண் ஹாலில் துவங்கிய அகில இந்திய வழக்கறி ஞர்கள் சங்கத்தின் மாநாட்டுக்கு தலைமை வகித்த சங்கத்தின் அகில இந்திய தலைவர் வழக்கறிஞர் பிகாஸ் ரஞ்சன் பட்டாச்சார்யா கொடி ஏற்றினார். பொதுச் செயலாளர் சோம தத்த சர்மா, பொருளாளர் சம்கிராஜ், ஓய்வு பெற்ற நீதிபதி வி.கே.மோக னன் உள்ளிட்டோர் பேசினர்.


 

;