tamilnadu

img

சந்திரயான் -2 ஜுலை மாதம் செலுத்தப்படும்: இஸ்ரோ

மேக மூட்டங்கள் இருந்தாலும், இரவு நேரமாக இருந்தாலும்பருவ நிலை மாற்றம் குறித்து தெளிவான படங்கள் கிடைக்கும் என்று இஸ்ரோ தலைவர் டாக்டர்சிவன் தெரிவித்தார்.சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிகாலை விண்ணில் செலுத்தப்பட்ட சேட்டிலைட் எந்தவொரு பருவ மாற்றங் கள் இருந்தாலும் உடனே புகைப்படங்களை அனுப்பும் என்றும்இது போல் மேலும் சில விண்கலத்தை அனுப்ப முயற்சி செய்துவருவதாகவும் தெரிவித்தார். சந்திராயன் -2 விண்கலம் வரும் ஜுலை9 ல் இருந்து 16 ஆம் தேதிக்குள் செலுத்தப்படும் என்று கூறிய அவர், அது செப்டம்பர் 6 அன்று சந்திரனில் தரையிறங்கும் என் றும் குறிப்பிட்டார். மேலும் நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம்2022ம் ஆண்டு ஆகஸ்டு 15ந்தேதிக்கு பின்னர் பரிசீலிக்கப் படும் என்றும் இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார்.