tamilnadu

img

விஜய் சேதுபதியின் அடுத்த படம் க/பெ ரணசிங்கம்

விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய இருவரும் ஏற்கனவே ரம்மி, 'பண்ணையாரும் பத்மினியும், 'இடம் பொருள் ஏவல்' மற்றும்  'தர்மதுரை' ஆகிய திரைப்படங்களில் ஜோடியாக நடித்துள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு புதிய படத்திற்காக இணைந்துள்ளனர். இந்த படத்திற்கு 'க/பெ ரணசிங்கம்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

கே.ஆர்.ஜே ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் இந்த படத்தை விருமாண்டி இயக்கவுள்ளார். ஜிப்ரான் இசையில் வைரமுத்து பாடல் வரிகளில், சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவில், சிவந்தீஸ்வரம் படத்தொகுப்பில் பீட்டர் ஹெலன் சண்டைப்பயிற்சியில் இந்த படம் உருவாகவுள்ளது

இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த பூஜையில் விஜய்சேதுபதி, ஐஸ்வர்ய ராஜேஷ் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என தெரிகிறது.