தமிழகத்தில் ஊரடங்கு பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில், கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,661 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 435 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கோவிட்-19 தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், இந்த 4 மாவட்டங்களில் வரும் ஜூன் 19 முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கனவே டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு அமல்படுத்துப்பட்டுள்ள மற்ற 3 மாவட்டங்களிலும் டாஸ்மாக் ஜூன் 19 முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை மூட, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.