புதுதில்லி, மே 19-தமிழகத்தில் திமுக கூட்டணி 34 முதல் 38 இடங்களிலும், அதிமுக அதிகபட்சம் நான்கு தொகுதிகளிலும் வெல்லும் என இந்தியா டுடே - ஏக்சிஸ் கருத்துக் கணிப்பு கூறுகிறது.புதுச்சேரி தொகுதி காங்கிரஸ் கட்சியின்வசமாகும் என்று இந்தக் கருத்துக்கணிப்பு கூறுகிறது.சி.என்.என் - நியூஸ் 18 கருத்துகணிப்பு திமுக 22 -24 தொகுதிகளை கைப்பற்றுமென்றும், அதிமுக 14-16 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் கூறுகிறது.டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் கருத்துக் கணிப்பின்படி, தேர்தல் நடந்துள்ள 38 தொகுதிகளில் திமுக கூட்டணி 29 இடங்களிலும், அதிமுக கூட்டணி ஒன்பது இடங்களிலும் வெல்லும்.இந்தியா டுடே - ஆக்சிஸ் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் தென்மாநிலங்களை பொறுத்த வரை, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 55 – 63 தொகுதிகளிலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 23 – 33 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 35 – 46 தொகுதி களிலும் வெற்றி பெற வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.