tamilnadu

இந்திய வர்த்தகத்திலிருந்து வெளியேறும் சோனி மொபைல்

மும்பை, மே 23-இந்திய செல்போன் சந்தையிலிருந்து சோனி மொபைல் வெளியேறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் செல்போன் வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், லாபம் ஈட்டாத நாடுகளில் தனது வர்த்தகத்தை சோனி மொபைல் நிறுத்தவுள்ளதாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில், ஜப்பானில்நடந்த நிறுவன சந்திப்பு நிகழ்வு ஒன்றில் வர்த்தகம் குறித்து தெரிவித்துள்ள சோனி நிறுவனம், 2020ஆண்டு நிதியாண்டில்ஒட்டுமொத்த செலவுகளை 57 சதவிகிதமாக குறைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், ஜப்பான், தைவான் உள்ளிட்ட நாடுகளுடனான செல்போன் வர்த்தகத்தில் மட்டுமே கவனம்செலுத்த முடிவெடுத்துள்ளதாகவும் கூறியுள்ளது. அந்த பட்டியலில் இந்தியா இடம்பெறாததால் இந்திய வர்த்தகத்திலிருந்து சோனி மொபைல் வெளியேறவுள்ளதாக கூறப்படுகிறது.