tamilnadu

img

தமிழகத்தில் ஜூன் 19 முதல் சின்னத்திரை படப்பிடிப்புகள் ரத்து.... 

சென்னை
4 கட்ட கொரோனா ஊரடங்கால் சினிமா தொழிலாளர்கள் வருமானமின்றி பெரிதாக பாதிக்கப்பட்டனர்.  இதனால் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன தலைவர் ஆர்.கே. செல்வமணி 5-ஆம் கட்ட ஊரடங்கில் தமிழக அரசின் அனுமதியைப் பெற்று சின்னத்திரை சீரியல்களுக்கான படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.

கடந்த ஒருவார காலமாக 50 சதவீத நபர்களுடன் நடந்து கொண்டிருக்கும் இந்த சின்னத்திரை படப்பிடிப்பை வரும் 19-ஆம் தேதி முதல் நிறுத்திவைக்கப்படுவதாக ஆர்.கே. செல்வமணி அறிவித்துள்ளார். சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள 3 மாவட்டங்களில் கொரோனா ஆக்ரோஷமாக பரவி வருவதால்  தமிழக அரசு ஜூன் 19-ஆம் தேதியில் இருந்து முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவித்தது. இதன் காரணமாகவே இந்த நடவடிக்கை என ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

படப்பிடிப்புக்கு அனுமதி வழங்ப்பட்டதால் பெரும்பாலான தமிழ் சேனல்கள் சீரியலை ஒளிபரப்பு செய்ய விளம்பரம் வெளியிட்டது.  புதிய சீரியலை தயாரிக்க பல நிறுவனங்கள் அடுத்த கட்ட வேலையை தொடங்கிய நிலையில்,  திடீர் படப்பிடிப்பு ரத்தால் தயாரிப்பு நிறுவனங்கள் அதிர்ச்சியில் உள்ளன

;