tamilnadu

img

திரைப்பட விழாவில் ரஜினிக்கு விருது

பனாஜி,நவ.20- கோவா மாநிலம் பனாஜி யில் 50 ஆவது சர்வதேச திரைப்பட விழா நவம்பர் 20 புதனன்று துவங்கியது. இந்தியா, ரஷ்யா இணைந்து நடத்திய இந்த விழாவுக்கு, மத்திய தகவல் -ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமை வகித் தார். விழாவை நடிகர்கள் அமி தாப்பச்சன், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். சர்வதேச திரைப்பட விழாவின் பொன்விழா ஆண்டு என்பதால், திரைப் படத் துறைக்கு முக்கிய பங்களிப்பு செய்த கலைஞர் களை கவுரவிக்க மத்திய அரசு முடிவு செய்திருந்தது.  இதன்படி, கவுரவ விரு தான ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி விருது நடிகர் ரஜினி காந்த்திற்கு வழங்கப் பட்டது.  மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், இந்தி நடிகர் அமிதாப்பச்சன் ஆகியோர் இணைந்து விருதை வழங்கினர். தம்மை  வாழவைத்த தமிழ் மக்க ளுக்கு விருதை சமர்பிப்ப தாக ரஜினிகாந்த் தெரிவித் தார்.

;