tamilnadu

img

ஐந்து மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை:
தென்மேற்குப் பருவக்காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாகஅடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:தென்மேற்குப் பருவக்காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தில் பரவலாக இடியுடன் கூடியலேசானது முதல் மிதமான மழைக்குவாய்ப்பு உள்ளது. வடமாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும்.  அடுத்த24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகும். எட்டாம் தேதி மேற்கு மத்திய வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தென்மேற்குப்பருவமழையை மேலும் வலுவடையச் செய்யும். மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதியில் காற்றானது மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

;