சென்னை:
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி, பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கோவை,நீலகிரி, ஈரோடு, தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழையும், வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாகமேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில்லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் 29 டிகிரி செல்சியசை ஒட்டியிருக்கும். வடக்கு கேரளா, கர்நாடகா மற்றும் கோவா, மகாராஷ்டிரா கடலோர பகுதிகளில் இன்றுசூறாவளிக் காற்று வீசக்கூடும். தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் 21 ஆம் தேதி வரையும், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் 19 ஆம்தேதி வரையிலும் பலத்தக் காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.