tamilnadu

img

தயாரிப்பாளர் சங்கத்திற்கு அரசு அதிகாரி நியமன விவகாரம்

சென்னை 

தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்குள் அடிக்கடி பிரச்சனை முளைப்பதால் தமிழக அரசு தனி அதிகாரியை நியமித்தது.


இதை எதிர்த்து நடிரும் தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

எந்தவித முறைகேடும் நடைபெறாத நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் செயல்பாடுகள் அனைத்துமே அரசு நியமிக்கப்பட்ட அதிகாரி மீதான மேற்பார்வையில்தான் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது சட்டவிரோதம் என்றும்,இதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று விஷால் தரப்பு கோரிக்கை வைத்தது. 


தயாரிப்பாளர் சங்கத்திற்குள் பிரச்சனைகள் தொடர்ந்து நீடிப்பதால் தனி அதிகாரி நியமித்ததாகவும், பிரச்சனைகள் முடிவுக்கு வந்துவிட்டால் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளிடம் சங்கத்தின் நிர்வாகம் ஒப்படைக்கப்படும் எனவும் அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.


தொடர்ந்து விஷால் தரப்பினர் தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் மட்டும் அளித்த ஒரே புகாரின் அடிப்படையில் தனி அதிகாரியை நியமித்தது தவறு என்றும், தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிய உள்ள நிலையில் விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்றும் விஷால் தரப்பினர் வாதம் வைத்தனர். இருதரப்புவாதங்களையும் கேட்ட நீதிமன்றம் இந்த விவகாரத்தில் மே 7-ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

;