tamilnadu

img

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரிப்போர் மக்களுக்கு உண்மையாக இல்லாதவர்கள்

எடப்பாடி பழனிச்சாமியை நினைத்து வெட்கப்படுகிறேன்: சித்தார்த்

சென்னை, டிச.10- எடப்பாடி பழனிச்சாமிதான் எனது மாநிலத்தையும் நமது  மக்களையும் பிரதிநிதித்துவப்ப டுத்துகிறார் என்பது மிகவும் வெட்ககரமானது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரிப்போர்  மக்களுக்கு உண்மையாக இல்லாதவர்கள் என்று அதிமுக நிலைப்பாட்டை நடிகர் சித்தார்த் கடுமையாக விமர்சனம் செய் துள்ளார். இதுகுறித்து அவர் பதி விட்டுள்ள டுவீட்டில் மேலும் கூறி யிருப்பதாவது:- குடியுரிமை திருத்தச் சட்  டத்தை ஆதரித்ததோடு அவரது  உண்மை முகம் வெளியே தெரிந்  துள்ளது. மக்களுக்கு உண்மை யாக இல்லாததே இதன் மூலம் வெளிப்பட்டிருக்கிறது. அதோடு என்ன விலை கொடுத்தாலாவது அதிகாரத்தில் தொடர்வதற்கான அவரது ஆசையும் இதன்மூலம் தெளிவாகியிருக்கிறது. நீங்கள் அனைவரும் இதற்கான பொறுப்  பேற்க வேண்டியது வரும். அது வரை உங்களது தற்காலிக அதி காரத்தை அனுபவித்துக்கொள்ள ளுங்கள் எனத் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை ஒருபோதும் குடி யுரிமை திருத்தச் சட்ட மசோதா வுக்கு அவர் ஆதரவு தரவில்லை  எனவும் அவர் இல்லாத நிலை யில், அதிமுக அந்த நெறிமுறை களை உடைத்துவிட்டது என்றும் சித்தார்த் பதிவிட்டுள்ளார். திங்களன்று(டிச.9) மக்கள வையில் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். 82 எதிர்ப்பு ஓட்டுகள் 311 ஆதரவு ஓட்டுகள் என்கிற நிலையில் அந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே பல்வேறு நாடாளுமன்ற உறுப்  பினர்கள் மசோதாவில் திருத்தங்  கள் கூறினாலும் அவற்றை ஏற்கா மல் சட்டம் திணிக்கப்பட்டது. காங்  கிரஸ், திமுக, இடதுசாரிகள், முஸ்லிம் லீக் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளில் 82 உறுப்பினர்கள் மசோ தாவுக்கு எதிராக வாக்களித்தனர். ஆனால் சிவசேனா, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மசோதாவை ஆதரித்து வாக்களித்தன.

;