குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, கேரள இடதுஜனநாயக முன்னணியும், ஐக்கிய ஜனநாயக முன்னணியும் கரம்கோர்த்து களமிறங்கியுள்ளன. திருவனந்தபுரத்தில் திங்களன்று நடைபெற்ற மாபெரும் போராட்டத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன், எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.