tamilnadu

img

கீழடியில் சுடுமண் சிற்பங்கள் மற்றும் சுடுமண் நகைகள் கண்டெடுப்பு!

திருப்புவனம் அருகே  கீழடியில் நடந்து வரும் ஐந்தாம் கட்ட அகழாய்வில் பெண்கள் அணியும் சுடுமண் காதணிகள், சங்கு வளையல்கள்,  மனித முகம், விலங்கு முகம் கொண்ட வினோதமான சுடுமண் சிற்பங்கள் அதிகளவில் கிடைத்துள்ளன.

கடந்த ஜூன் 13-ஆம் தேதி முதல், கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வை தமிழக தொல்லியல் துறை நடத்தி வருகிறது. இந்த அகழாய்வில் வட்ட வடிவிலான சுடுமண் காதணிகள் கண்டறியப்பட்டுள்ளன. காதணியின் உட்புறமும் வெளிப்புறமும் பூக்கள் வரையப்பட்டுள்ளது. மேலும், சங்கு வளையல்களின் உடைந்த பகுதிகளும் தற்போது கண்டறியப்பட்டுள்ளன. பண்டைய காலங்களில் பெண்கள் சுடுமண்ணால் ஆன காதணிகளை அணிந்து இருந்ததாகவும், சுடுமண் பொருட்கள் காலத்தால் அழியாதது, எளிதில் சேதமடையாது என்பதால் பண்டைய காலத்தில் சுடுமண் காதணிகள் புழக்கத்தில் இருந்திருக்கிறது என்று கூறப்படுகின்றது. 

மேலும், மனித முகம், விலங்கு முகம் கொண்ட வினோதமான சுடுமண் சிற்பங்கள் தற்போதைய அகழாய்வில் கிடைத்துள்ளன. இந்த முகங்கள் அச்சிலிருந்தது வார்க்கப்பட்டுள்ளது போன்று உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கைன்றனர். இதுவரை நடந்த நான்கு கட்ட அகழாய்வில் சுடுமண் சிற்பங்கள் கண்டறியப்படவில்லை. நான்காம் கட்ட அகழாய்வில் கூட சுடுமண் அச்சுகள், ஆண் மற்றும் பெண் சிற்பங்கள் கண்டறியப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

;