tamilnadu

img

மறைப்பது மக்களைக் காக்காது!

தமிழகத்தில் சமூகப்பரவலாக கொரோனா இல்லை, இருந்தால் இப்படி நின்று பேச முடியுமா என்று கேள்வியெழுப்பியிருந்தார் தமிழக முதல்வர். ஆனால், அவர் திருச்சிக்கு வந்தபோது, அவரைச் சந்திக்க வந்த அனைத்து அலுவலர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சமூகப் பரவலாக இல்லை என்றால், அவரைச் சந்திக்க வருபவர்களுக்கு எதற்குப் பரிசோதனை?

அவரைச் சந்திக்க வருபவர் களுக்கு மட்டும் பரிசோதனை என்றால்,நான் மட்டும் பாதுகாப்பாக இருந்துகொள்வேன், மக்களைப் பற்றிக் கவலைஇல்லை என்றுதானே பொருள்? நடந் தவை அப்படித்தான் இருக்கின்றன.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நான்கு பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்தித்தாள்களே செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், அப்படி உறுதிப் படுத்தப்பட்டவர்களுடன் பணியாற்றிக்கொண்டிருந்த மற்றவர்களுக்கு, கொரோனாபரிசோதனை செய்யப்படாமல், ஒருவாரம் அலுவலகத்துக்கு வரவேண் டாம், ஏதாவது நோய்க்குறி இருந்தால் பரிசோதனை செய்துகொள்ளலாம் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக் கப்பட்டுள்ளது.கொரோனாவுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் திரும்பத் திரும்ப கூறுவது, தொற்று ஏற்பட்டு, தாமதமாக வந்தால் உயிரைக் காக்க முடியவில்லை என்பதே. உடன் பணியாற்றியவருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டிருக்கிற நிலையில், அறிகுறி தெரிந்தால் பரிசோதனை செய்துகொள்ளலாம் என்பது, நோய் முற்றியபின் பரிசோதிப்பதாகத்தானே ஆகும்? அதனால் அவரது உயிருக்கு ஆபத்து மட்டுமின்றி, நோய் மேலும்பரவுவதற்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறதே?

பணிக்கு வரவேண்டாம், சுய தனிமைப்படுத்துதலைச் செய்துகொள் ளுங்கள் என்று வாய்மொழி உத்தரவின் மூலம் தெரிவிக்கப்பட்ட, மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்களின் இல்லங்களில் தனிமைப் படுத்துதல் பற்றிய அறிவிப்போ, அப்பகுதிகள் தடைசெய்யப்பட்ட பகுதியென்ற அறிவிப்போ செய்யப்படவில்லை. அதாவது, தொற்று இருப்பதையும், தொற் றுக்கான ஆபத்து இருப்பதையும் அரசுமறைக்கிறது.ஒரு கலவரம் நடைபெறும்போது, அதில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையை அரசு குறைத்துச் சொல்வது என்பது எப்போதுமே நடப்பது. மக்களிடையே பதற்றம் ஏற்பட்டு, மேலும் சிக் கல் ஏற்படாமலிருக்க அவ்வாறு சொல்வார்கள். ஆனால், கொரோனா தொற்றை மறைப்பது என்பது, தொற்றை மேலும் அதிகரிக்கவே செய்யும். தொற்று இல்லையென்று கருதிக்கொண்டு நடமாடுபவர்கள், பலருக்கும் தொற்றைப்பரப்புவார்கள். அதாவது, கத்தரிக்காய்முற்றினால் சந்தைக்கு வந்தே தீரவேண்டும் என்பதுபோல, இது மறைக்கமுடியாதது என்பது மட்டுமல்ல. மறைப் பது ஆபத்தை அதிகரிப்பதாகவும் உள்ளது. அவ்வாறு மறைத்து, தன் குடிமக்களுக்கு ஆபத்தை அதிகரிக்கிற வேலையைத்தான் தமிழக அரசு செய்துகொண்டுள்ளது.

ஓர் அலுவலகத்தில் சிலருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டபோதும், பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, முடிவு வரும்வரை அடுத்த மூன்று நாட்களும்கூட அவர்களுடனேயே பணியாற்றியவர்களுக்கு, பரிசோதனை செய்யப்படவே இல்லை என்பது அலட்சியத்தின் உச்சமா, பரிசோதனைக் கருவிகள் இன்மையா என்றுதெரியவில்லை. இரண்டில் எதுவாயினும், தமிழகம் மிகமிக ஆபத்தான நிலையிலிருக்கிறது என்பதற்கான அடையாளம் இது.மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவ்வாறு பணிக்கு வரவேண்டாம் என்று வாய்மொழியாக அறிவுறுத்தப் பட்ட ஊழியர் ஒருவரின் கணவர், எல்ஐசியில் பணிபுரிகிறார். அவரது குடும்பத்தில் யாருக்காவது தொற்று உறுதிப்படுத்தப்பட்டால்தான் அவருக்கு தனிமைப்படுத்தல் விடுப்பு வழங்கப்படவேண்டும் என்று எல்ஐசி கூறுகிறது. அவர் மனைவிக்கு அவர் பணிபுரிகிற அலுவலகத்தில்தான் தொற்றுக் கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்றாலும்கூட, அந்த (மாவட்ட ஆட்சியர்) அலுவலகம் பரிசோதனை செய்யத் தயாராக இல்லை. வேறு விடுப்பு இல்லை என்பதால், அவர் கணவரான எல்ஐசி ஊழியர், பணிக்கு வந்தால், அலுவலகத்திலுள்ள சுமார் 50 ஊழியர்கள், நாள்தோறும் வரும் 300-400 வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் தொற்று பரவுவதற்கான வாய்ப்பு உள்ளதே? இதனை மாநில அரசோ,எல்ஐசி நிர்வாகமோ கருத்திற்கொள்ளவில்லை என்பது, தொற்றைத் தடுப்பதில் அவர்களது கடமைகளைத் தட்டிக்கழிக்கின்றன என்றுதானே பொருள்?இத்தகைய ஒரு பெருந்தொற்றிலிருந்து மக்களைக் காக்கிற கடமை மத்திய, மாநில அரசுகளுக்குத்தான் உள்ளது. தொடக்கத்திலிருந்து மத்திய அரசு அந்தக் கடமையிலிருந்து விலகி, தொற்றால் ஏற்பட்டுள்ள ஆபத்தான் சூழ்நிலையை, பொதுத்துறை நிறுவனங்களை விற்பதிலிருந்து, நாற் தோறும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதுவரை, எரிகிற வீட்டில்பிடுங்கியது லாபம் என்று பயன்படுத்திக்கொண்டிருக்கிறது. மாநில அரசோ,இல்லையென்று சொல்லிவிட்டால், கொரோனா இல்லாமல் ஆகிவிடும்என்று கற்பனை செய்துகொண்டிருக்கிறது. மக்களே, தங்களைப் பாதுகாத் துக்கொள்ள முயற்சித்தாலும், தொற்றுஇருப்பவருடன் பணியாற்றியவரை ஒரு வாரம் கழித்து அறிகுறி இருந்தால் பரிசோதித்துக்கொள்ளலாம் என்றுகூறியது மாதிரியான நடவடிக்கைகளின்மூலம், அரசே ஆபத்தை உருவாக்குகிறது!

===அறிவுக்கடல்===

;