மும்பை, ஆக.4- மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதி களில் கடந்த 2 நாட்களாக தொடர் கன மழை பெய்வதால் மும்பை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. குறிப்பாக, மும்பை, புனே, தானே உள்ளிட்ட முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மும்பையில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழைப் பொழிவு நீடிப்ப தால் இயல்பு வாழ்க்கை முற்றாக ஸ்தம்பித்துள்ளது. ஏராளமான வீடு களில் வெள்ளநீர் புகுந்துள்ளது. ஆறு கள், கால்வாய்களில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. பல்கர் உள்ளிட்ட மாவட்டங்களில் விமானப் படை ஹெலி காப்டர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள் ளன. மழை தொடர்ந்து நீடிக்கும் நிலை யில் பல்கர், தானே, ராய்கட், நாசிக், புனே, கோலாப்பூர், சதரா ஆகிய மாவட்டங் களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.