tamilnadu

img

ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் திரைப்படங்களுக்கு மத்திய அரசு விருது அறிவிப்பு

பார்த்திபன் இயக்கிய ஒத்த செருப்பு மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ஹவுஸ் ஓனர் திரைப்படத்திற்கு மத்திய அரசு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மொழி சார்ந்த திரைப்படங்களுக்கு மத்திய அரசு விருது வழங்கி வருகிறது. அதன்படி 2019ஆம் ஆண்டுக்கான விருது பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதில் தமிழ் திரைப்படமான ஒத்த செருப்பு மற்றும் ஹவுஸ் ஓனர்  திரைப்படம் இடம் பெற்றுள்ளது.

இயக்குநரும் நடிகருமான பார்த்திபனின் கடந்த ஆண்டு ஒத்த செருப்பு என்ற படத்தை இயக்கி இருந்தார். அதில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே ஒட்டுமொத்த திரைப்படத்திலும் தோன்றும் வகையிலான திரைக்கதை அமைத்து இருந்தார். இந்திய சினிமாவில் இது புதிய முயற்சி என்று பலரும் பாராட்டினர். இந்தப் படம் ஆசியா புக் ஆப் ரெகார்ட்ஸ்-லும் இடம் பெற்றது. இந்நிலையில் தற்போது மத்திய அரசின் விருதுக்கு ‘ஒத்த செருப்பு’ தேர்வாகி உள்ளது. 

இதேபோல் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ஹவுஸ் ஓனர் என்ற தமிழ் திரைப்படத்திற்கு விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திரைப்படமும் அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றது.