tamilnadu

img

தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை:
காற்றின் திசைவேக மாறுபாடு மற்றும் வெப்பச்சலனம் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றின் திசைவேக மாறுபாடு மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கடலோர மாவட்டங்கள் புதுவை, காரைக்கால் மற்றும் கோவை, சேலம், நாமக் கல், நீலகிரி, வேலூர், திருவண் ணாமலை, விழுப்புரம் மாவட்டங் களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.புதனன்று  கடலேர மாவட்டங் கள் மற்றும் உள் தமிழக மாவட் டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும்.சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு பிற்பகலில் வானம்  மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் 27 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் தேவலாவில் 6 சென்டிமீட்டர் மழையும், கோவை வால்பாறையில் 5 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
வரும் 11ஆம் தேதி வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிலொ மீட்டர் வேகத்திலும், அதேபோல் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த காற்று விசக்கூடும்.ஜூலை 7, 8 தேதிகளில் வடக்கு அரபிக்கடல் பகுதியில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத் திலும், ஜூலை 9, 10 தேதிகளில் வடக்கு அரபிக்கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

;