சென்னை:
தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள் ளது. மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.தமிழக கடற்கரை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மழைக்கு வாய்ப்பு உள்ளது. கன்னியாகுமரி, தூத்துக்குடியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.சென்னை நகர், புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரை விரகனூர் அணை பகுதியில் 10 செ.மீ., மதுரை விமான நிலைய பகுதியில் 8 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.