tamilnadu

img

8 வழிச் சாலை - தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

புதுதில்லி, ஜுன் 3 -8 வழிச் சாலைக்காக நிலம் கையகப்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்சநீதிமன்றம் திங்களன்று (ஜூன் 3) மறுப்பு தெரி வித்துள்ளது.சேலம் - சென்னை இடையே யான எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ள தடைக்கு எதிராக, மத்திய அரசுஉச்சநீதிமன்றத்தில் வெள்ளிக் கிழமை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. மனுவை தாக்கல் செய்த மத்திய அரசுத் தரப்பு வழக்குரைஞர், இதை மிக முக்கியமான மனுவாகக் கருத வேண்டும் என்று நீதிபதிகள் அமர்விடம் கேட்டுக்கொண்டார். அந்த மனுவை திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம், சேலம் 8 வழிச் சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் அரசாணைக்கு உயர்நீதி மன்றம் விதித்த தடையை ரத்து செய்ய மறுத்துவிட்டு, எதிர்மனு தாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை ஜூன்மாதம் முதல் வாரத்துக்கு ஒத்தி வைத்தது.விசாரணையின் போது, “சேலம் 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு உட் படுத்த வேண்டிய அவசியம் இருக் கிறது. சாலை திட்டத்துக்கு நிலத்தை கையகப்படுத்தியதில் அதிக தவறு கள் இருப்பதை காண முடிகிறது. திட்ட அறிவிப்பை வெளியிடும் முன்பே நிலத்தை கையகப்படுத்தி தரவுகள் சேர்க்கப்பட்டுள்ளது. திட்டத்திற்கான அனுமதி கிடைக்கப் பெறுவதற்கு முன்பே நிலத்தை எடுத்து தரவுகளை எப்படி சேர்த்தீர் கள்” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் விஷயமாக நாங்கள் கருதவில்லை என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.