tamilnadu

img

10,11,12-ஆம் வகுப்புகளுக்கான பாடங்களை குறைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு

தமிழகத்தில், 10,11,12-ஆம் வகுப்புகளுக்கான பாடங்களை குறைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கோவிட்-19 பரவல் காரணமாக, கடந்த மார்ச் மாதம் பிறபிக்கப்பட்ட ஊரடங்கில் இருந்து தற்போது வரை கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்த சூழலில், 10-ஆம் வகுப்பு பொது தேர்வு உட்பட அனைத்து வகுப்புகளும் தேர்வு ரத்து செய்யப்பட்து. இந்த சூழலில், 10,11,12-ஆம் வகுப்புகளுக்கான பாடங்களை குறைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, 10-ஆம் வகுப்பில் சமூக அறிவியல் பாடத்துக்கு இரண்டு புத்தகங்கள் உள்ள நிலையில், வரும் கல்வியாண்டில் ஒரே புத்தகமாக இருக்கும். அதேபோன்று, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு கணிதம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட பாடங்களைத் தவிர மற்ற பாடங்கள் ஒரே புத்தகத்தைக் கொண்டிருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கோவிட்-19 பாதிப்பு காரணமாக 50 சதவீத பாடப்புத்தகங்களை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.