tamilnadu

img

தண்ணீர் லாரிகள் 21 ஆம் தேதி முதல் வேலைநிறுத்தம்

சென்னை, ஆக.18- தமிழகம் முழுவதும் வரும் 21 ஆம் தேதி முதல் தனியார் தண்ணீர் லாரிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அனைத்துப் பகுதிகளுக்கும் பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யும் வேலையில் அரசு மற்றும் தனியார் லாரிகள் ஈடுபட்டு வருகிறது. அதிலும் தனியார் தண்ணீர் லாரிகள் மூலம் கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், தண்ணீர் விநியோகம் செய்யும் தனியார் லாரிகள் வரும் 21ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் நிஜலிங்கம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தண்ணீர் விநியோகம் செய்யும் தனியார் லாரிகளை சிறைபிடிப்பதை கண்டித்தும், லாரி உரிமையாளர்கள் மீது பொய்யாக திருட்டு வழக்குகள் பதிவு செய்வதை கண்டித்தும் தமிழகம் முழுவதும் வரும் 21ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம் என தெரிவித்துள்ளார்.