tamilnadu

img

மறைந்த தோழர் டி.லட்சுமணனுக்கு அஞ்சலி

தஞ்சாவூர், ஆக.26- முன்னாள் மாநில செய ற்குழு உறுப்பினரும், அனை த்து வகை மாற்றுத்திறனாளி சங்கத்தினுடைய மாநிலத் துணைத் தலைவருமான டி.லட்சுமணனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கட்சி யின் தஞ்சை மாவட்டக்குழு அலுவலகத்தில் புதன்கி ழமை நடைபெற்றது. சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ. நீலமேகம் தலைமை வகி த்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன் முன்னிலை வகித்தார். மாந கரச் செயலாளர் என்.குரு சாமி, மாவட்டக்குழு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.
திருத்துறைப்பூண்டி
செவ்வாயன்று தியாகி சிவராமன் நினைவகத்தில் நடைபெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் கே.ஜி.ரகுராமன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர்.
கரூர்
கரூர் ஒன்றியக்குழு சார்பாக கட்சி அலுவலகத்தில் நடந்த இரங்கல் கூட்டத்திற்கு மாவட்டக் குழு உறுப்பினர் அ.காதர்பாட்சா உள்ளிட்ட பலர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.