tamilnadu

img

ஜன.8 வேலை நிறுத்த விளக்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள்

தஞ்சாவூர்: ஜனவரி 8 ஆம் தேதி நடைபெற உள்ள பொது வேலை, நிறுத்தத்தை வெற்றிகரமாக ஆக்கிட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தயாரிப்புக் கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் 10 ஆயிரம் பேரணி, ஊர்வலம், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பது என தீர்மானிக்கப்பட்டது.  மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத, ஜனநாயக விரோதப் போக்கைக் கண்டித்து நாடு தழுவிய அளவில் பொது வேலை நிறுத்தம் ஜன.8 அன்று நடைபெற உள்ளது. இப்போராட்டத்தில் தஞ்சை மாவட்டத்தில் வெற்றிகரமாக நடத்திட தஞ்சையில், அனைத்து தொழிற்சங்க ஆலோசனைக் கூட்டம் தொ.மு.ச மாவட்டச் செயலாளர் கு.சேவியர் தலைமையில் நடைபெற்றது.  கூட்டத்தில் சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால், அரசுப் போக்குவரத்து கழக சங்க கவுரவத் தலைவர் ஆர்.மனோகரன், மாநிலக்குழு உறுப்பினர் கல்யாணி, மாவட்டக்குழு உறுப்பினர் வி.ராமலிங்கம், ஏஐடியூசி மாவட்டச் செயலாளர் ஆர்.தில்லைவனம், சி.சந்திரகுமார், துரை. மதிவாணன், ஐஎன்டியூசி ஏ.ரவிச்சந்திரன், எம். வேணுகோபால், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில், மாவட்டம் முழுவதும் பேரணி, ஊர்வலம், ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டத்தில் வெற்றிகரமாக நடத்துவது, மறியல் போராட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களை பங்கேற்க வைப்பது என முடிவு செய்யப்பட்டது. வேலை நிறுத்தத்தை விளக்கி ஜன 5, 6, 7 ஆகிய 3 தினங்கள் மாவட்டம் முழுவதும் 100 க்கும் மேற்பட்ட மையங்களில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. 

;