tamilnadu

தஞ்சாவூர், புதுக்கோட்டை, ‎நாகப்பட்டினம் முக்கிய செய்திகள்

சிறப்பு பேருந்துகள் இயக்கம் 
தஞ்சாவூர்,அக்.25- வரும் அக்.29 ஆம் தேதி நடை பெற உள்ள குரு பெயர்ச்சி விழா வையொட்டி, ஆலங்குடி, திட்டை, சூரியனார் கோயில் ஆகிய இடங்க ளில் உள்ள கோயில்களுக்கு, கும்ப கோணம், நீடாமங்கலம், மன்னார் குடி, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் இருந்து ஆலங்குடிக்கும், கும்ப கோணத்தில் இருந்து சூரியனார் கோயிலுக்கும், தஞ்சாவூரிலிருந்து திட்டைக்கும் அக்.28 இரவு முதல் 29 இரவு வரை, விழா சிறப்பு பேரு ந்துகளை இயக்கவுள்ளது என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்(கும்பகோணம்) லிட் பொது மேலாளர் தெரிவித்துள் ளார்.

இருவர் கைது
புதுக்கோட்டை, அக்.25- புதுக்கோட்டையில் இருந்து 96 மதுபாட்டில்களை வாங்கிக் கொண்டு தனது மோட்டார் சைக்கிள் சென்ற பெருமாள்பட்டி யைச் சேர்ந்த எஸ்.ராஜசேகரன்(32) மற்றும் புதுக்கோட்டையில் இருந்து 70 மதுபாட்டில்களை வாங்கிச் சென்றதாக சின்னரா யப்பட்டியைச் சேர்ந்த எம்.கருப் பையா(65) ஆகியோரை புதுக் கோட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர்.

பேரிடர் மீட்பு ஆலோசனைக் கூட்டம் 
சீர்காழி, அக்.25- வடமேற்கு பருவமழையை யொட்டி அனைத்து துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  வடமேற்கு பருவமழை தீவிர மடைந்துள்ளதால், மாவட்ட ஆட்சி யர் உத்தரவின் பேரில் முன்னெச்ச ரிக்கை மற்றும் இடம் பெயர்தல் குழு தலைவராக சீர்காழி தாலுகா அளவில் கொள்ளிடம் வேளாண் உதவி இயக்குநர் சுப்பையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  வருவாய்துறை, ஊரக வளர்ச்சித் துறை, காவல்துறை, சுகாதாரத் துறை, கால்நடை பரா மரிப்புத் துறை, வேளாண் துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அதி காரிகள் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.