திண்டுக்கல், ஜூலை 30- கொடைக்கானல் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் இருவரி டையே ஏற்பட்ட தகராறில் மாணவன் ஒரு வன் கொல்லப்பட்டான். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கா னல் கோல்ப் கிளப் அருகே தனியார் உண்டு உறைவிட பள்ளி இயங்கி வருகிறது.இங்குள்ள விடுதியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் இருவரி டையே திங்களன்று இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றி யதில் ஆத்திர மடைந்த மாணவன் மற்றொரு மாணவனை கத்திரிக்கோலால் கழுத்தில் குத்தி யுள்ளான். மேலும் அங்கிருந்த கிரிக்கெட் ஸ்டெம்பாலும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த கபில் ராக வேந்திரா என்ற மாணவர் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தான். கத்திரிக்கோலால் தாக்கிய மாணவரை கைது செய்த காவல்துறையினர், விசா ரணை நடத்தி வருகின்றனர்.