tamilnadu

மதுக்கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு

தஞ்சாவூர், மே 7- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே கொரட்டூர் கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வந்தது. ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த மார்ச் 26 ஆம் தேதி முதல் மதுபானக் கடை கள் மூடப்பட்டன.  இந்நிலையில் சென்னை தவிர்த்து, அனைத்து மாவட்டங்களிலும் மதுபானக் கடை மே.7 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டதை தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட கண்காணிப்பு பகுதியை சுற்றி 5 கி.மீ தூரத்திற்குள் மதுபானக் கடைகளை திறக்கக் கூடாது என மாவட்ட நிர்வாகம் உத்தர விட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இதில் சேதுபாவாசத்திரம் ஒன்றியம், கழனி வாசல் ஊராட்சி கொரட்டூர் கிராமத்தில் மதுபா னக் கடையை திறக்க கூடாது என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் முடச்சிக் காடு சமத்துவபுரத்தில் ஒரு பெண்ணுக்கு கொரோ னா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தடை செய்யப் பட்ட கண்காணிப்பு பகுதியான பூக்கொல்லையில் உள்ள மதுபானக் கடையை மூடி விட்டு, கண்கா ணிப்பு பகுதியில் உள்ள கொரட்டூர் கிராமத்தில் டாஸ்மாக் கடையை திறந்தால் தடை செய்யப் பட்ட பகுதியில் இருந்து மதுக்கடைக்கு வரும் நபர்க ளால் கழனிவாசல் ஊராட்சி பகுதி மக்களுக்கு நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது எனக் கூறி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.