tamilnadu

img

சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம்- ராஜாமடம் இடையே பெரிய ஏரி அருகில், கிழக்கு கடற்கரைச் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் அவ்வழியாக செல்லும் இருசக்கர மற்றும் கனரக வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை ஏறபட்டுள்ளது. எனவே, உடனடியாக இப்பள்ளத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.