tamilnadu

img

குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், டிச.21- தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணத்தில் குடியுரிமை மசோதா விற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சை மாவட்ட ஜமாத்துல் உலமா சபை மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் அரசியல் அமைப்புகள் இணைந்து போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு தஞ்சை மாவட்ட ஜமாத்துல் உலமா சபை தலைவர் அய்யூப் கான் தலைமை தாங்கினார் இஸ்லாமிய இயக்கங்களின் ஒருங்கி ணைப்பாளர்கள் ஜபருல்லா, ஷாஜகான், செல்லப்பா இப்ராஹிம், பாதுஷா மகரூப், குலாம் உசேன் ஜாபர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ராமலிங்கம் எம்பி., எம்எல்ஏக்கள் அன்பழகன் கோவி செழியன் தலைமை இமாம் சவுக்கத் அலி ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். இஸ்லாமிய இயக்கங்கள் ஏற்பாடு செய்திருந்த இப்போராட்டத்திற்கு திமுக, காங்கி ரஸ், மதிமுக, விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய கம்யூ னிஸ்ட்டுகள், இஸ்லாமிய அமைப்பு கள் என பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்திருந்தனர். குடியுரிமை மசோதாவில் இஸ்லா மியர்களையும் இலங்கை தமிழர்க ளையும் புறக்கணித்ததை கண்டித் தும், இந்திய இறையாண்மைக்கு எதிராக கொண்டு வரப்பட்டிருக்கும் அச்சட்டத்தை திரும்ப பெற வேண் டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் முழக்கமிட்டனர். இதில் கட்சி சார்பற்று ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இதனால் 5000 க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் திரண்டனர். மேலும் 500க்கு மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதே போல் தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக் குழு சார்பில், தஞ்சாவூர் ரயிலடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் பி.எம்.காதர் உசேன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்டப் பொருளாளர் எஸ். ஞான மாணிக்கம், மாநகரத் தலைவர் ஹெச். அப்துல் நசீர், மாநகர துணைத் தலைவர் என். குருசாமி, மாநகரச் செயலாளர் எம்.கோஸ்கனி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க மாநில துணைப் பொ துச்செயலாளர் கவிஞர் களப்பிரன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலக்குழு உறுப்பினர் என். சிவகுரு, சிபிஎம் மாவட்டக்குழு இரா.புண்ணியமூர்த்தி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் எஸ்.எம். ஜெயினுலாபு தீன், மாநகர மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் காலித் அகமது, மனித நேய மக்கள் கட்சி மாநிலச் செயலா ளர் பாதுஷா, தஞ்சை மாவட்ட உல மாக்கள் சபை தலைவர் ஹாஜா மைதீன், வல்லம் மேலப்பள்ளிவாசல் உபயதுல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

;