தஞ்சாவூர், டிச.4- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கத்தின் முன்னாள் மாவட்டப் பொ ருளாளரும், பட்டுக் கோட்டை ஒன்றியத் தலை வருமான முகமது ராவுத்தர் (37) உடல் நலக்குறைவு கார ணமாக பிப்.3 செவ்வாய்க் கிழமை காலமானார். அன்னாரது உடல் அடக்கம் புதன்கிழமை மாலை அதிராம்பட்டினத்தில் நடைபெற்றது. இதில், மாவட்ட மாற்றுத் திறனா ளிகள் நல அலுவலர் டி.ரவிந் தீரன், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.எம். இளங்கோவன், மாவட்டத் தலைவர் ஏ.பஹாத் அகமது, மாவட்ட துணைத் தலைவர் கே.கிருஷ்ணமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் பலர் அஞ்சலி செலுத்தினர்.