tamilnadu

தஞ்சை ராசா மிராசுதார் மருத்துவமனையில் மின்கசிவு கர்ப்பிணிகள் - பச்சிளம் குழந்தைகள் கடும் அவதி சுயநலத்துடன் செயல்பட்ட மருத்துவமனை ஊழியர்கள்

தஞ்சாவூர் ஜூலை 7- தஞ்சாவூர் ராசாமிராசுதார் அரசு மருத்துவனையில், ஒருங்கிணைந்த பேறுகால அவசரச் சிகிச்சை மற்றும் சிசு  தீவிர சிகிச்சைப் பகுதியில் மின்கசிவு ஏற்பட்டது. தஞ்சாவூர், ராசாமிராசுதார் அரசு மரு த்துவமனையில், மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவு, கண் சிசிச்சை பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகள் செயல்படுகிறது. பிரசவத்திற்காக டெல்டா மாவட்டங்களில் இருந்து நா ள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வருகின்றனர். கடந்த மாதம் முதல்வரால் மூன்று  தளத்தில் ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர  சிகிச்சை பராமரிப்பு மைய புதிய  கட்டடம் திறக்கப்பட்டது. இங்கு 200-க்கும் மேற்பட்ட குழந்தை பிரசவித்த பெண்கள் பச்சிளம் குழந்தைகளுடனும், குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் 50-க்கும் மேற்பட்ட குழ ந்தைகளும் சிகிச்சையில் உள்ளனர்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணிக்கு இரண்டாவது தள த்தில், மின் கசிவு ஏற்பட்டு, மின் ஒய ர்கள் தீப்பிடித்து எரியத் தொடங்கிய நிலையில், மருத்துவமனை ஊழியர்கள் மின் இணைப்பைத் துண்டித்தனர். அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக மாறியது. இதனால் பீதியடைந்த தாய்மார்கள் பச்சிளம் குழந்தைகளை தூக்கிக் கொண்டும், பிரசவத்திற்காக வந்திருந்த கர்ப்பிணிகளும் வெளியே ஓடி வந்தனர். தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மின்க சிவு ஏற்பட்ட பகுதியில் தண்ணீர் மற்றும்  ரசாயன பவுடரை அடித்தனர். தாய்மா ர்கள் தங்கள் பச்சிளம் குழந்தைகளுடன் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக  தரைத் தளத்தில், வெளியே அமர்ந்திரு ந்தனர். அறுவை சிகிச்சை செய்து குழ ந்தை பிரசவித்த பெண்கள் சிலர், வேக மாக இறங்கி வந்ததால் வலியால் பாதி க்கப்பட்டனர். இதில் படிக்கட்டில் இருந்து சில பெண்கள் விழுந்து விட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவ க்கல்லூரி முதல்வரிடம் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் நிலைமை சரியான நிலையில், மீண்டும் வார்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்ட னர். மின்கசிவு ஏற்பட்ட பகுதியை ஆட்சி யர் ம.கோவிந்தராவ் ஆய்வு செய்தார்.

தெறித்து ஓடிய ஊழியர்கள்
மின்கசிவு ஏற்பட்ட நிலையில், யாரை  பற்றியும் கவலைப்படாமல், முன்னெ ச்சரிக்கையும் செய்யாமல் மருத்துவ மனை ஊழியர்கள், நர்சுகள் சிலர் தெறி த்து கட்டிடத்தில் இருந்து வெளியேறி ஓட்டம் எடுத்தனர் என கர்ப்பிணி பெண்கள் வேதனை தெரிவித்தனர்.

;