தஞ்சாவூர், அக்.23- ரேசன் கடைகளை பாதுகாக்க வேண்டும். ரேசன் வினியோகத்தை முறைப்படுத்த வேண்டும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், அத்தி யாவசிய பொருட்கள் அனைத்தை யும் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும். வறுமைக்கோட்டு பட்டிய லின் பெயரில் ரேஷன் கார்டுகளை குறைக்கக்கூடாது. அரிசி, பருப்பு, மண்ணெண்ணெய், சர்க்கரை, பாமா யில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை குறைக்காமல் வழங்க வேண்டும். 3 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க வேண்டும். தீபாவளி பண்டி கையை முன்னிட்டு அனைத்து அத்தி யாவசிய பொருட்களையும் தட்டுப்பா டின்றி வழங்க வேண்டும். ஒரே குடும்ப அட்டை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரி க்கைகளை வலியுறுத்தி அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அம்மா பேட்டை ஒன்றியக் குழு சார்பில் 3 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இராராமுத்திரைக்கோட்டையில் ஜி.வசந்தி, ஒன்பத்துவேலியில் மார்க்கி ரேட், கொம்மஞ்சேரியில் எஸ்.ஜோஸ்பின் மேரி ஆகியோர் ஆர்ப்பாட் டத்திற்கு தலைமை வகித்தனர். மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.கலைச்செல்வி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். மாதர் சங்க ஒன்றியத் தலைவர் என்.வெற்றிச் செல்வி, ஒன்றியச் செயலாளர் எம்.சசிமதி, ஒன்றியப் பொருளாளர் வி. சைலஜா மற்றும் மாதர் சங்க உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.