tamilnadu

தஞ்சாவூர் முக்கிய செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணம் வழங்கும் முகாம் 
தஞ்சாவூர், ஜூலை 26-தஞ்சாவூர் மாவட்டத்தில் 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திற னாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் 15 ஒன்றி யங்களில் ஆகஸ்டு 1-ம் தேதி முதல் நடைபெறுகிறது.  மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வேண்டுவோர், உதவி உபகரணங்களான மூன்று சக்கர வண்டி, சக்கர நாற்காலி, காதொலி கருவி, நடைபயிற்று வண்டி மற்றும் கை, கால் செயற்கை அவயங்களுக்கான காலிப்பர்கள் தேவைப்படுவோர் இதற்குரிய சான்றுடன் மருத்துவ மதிப்பீட்டு முகாம்களில் பங்கு பெற்று எவ்வித கட்டணமுமின்றி பயன் பெறலாம். முகாம் காலை 9 முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும். தஞ்சாவூர் நகரில் ஆக.1 அன்று அன்பு இல்லம், தூய அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி, ஆக.2 பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆக.6 திருவையாறு அரசு மருத்துவமனை, ஆக.7 பேராவூரணி அரசு மருத்துவமனை, ஆக.8 ஒரத்தநாடு தூய மரியன்னை நடுநிலைப்பள்ளி, ஆக.9 கும்பகோணம் அரசு மருத்துவமனை, ஆக.13 மதுக்கூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆக.14 திருவிடைமருதூர் அரசு மருத்துவமனை, ஆக.16 வல்லம் ஊராட்சி ஒன்றிய வல்லம் கிழக்கு தொடக்கப்பள்ளி, ஆக.20 திருவோணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஆக.21 பூதலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. ஆக.22 திருப்பனந்தாள் அரசு ஆரம்ப சுகாதார மையத்தி லும், ஆக.27 அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார மையம், ஆக.28 சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் அழகிய நாயகி புரம், பத்துக்காடு ஆரம்ப சுகாதார மையத்திலும் மருத்துவ முகாம் நடைபெறும் எனவும், 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திற னாளிகள் முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு ஆட்சி யர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

கார்கில் போர் வெற்றி தினம் அனுசரிப்பு 
தஞ்சாவூர், ஜூலை 26-தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கார்கில் போர் வெற்றி தினம் அனு சரிக்கப்பட்டது. தேசிய மாணவர் படை சார்பில் நடைபெற்ற கார்கில் போர் வெற்றி தின 20 ஆம் ஆண்டு நிகழ்ச்சிக்கு தலை மையாசிரியர் அ.கருணாநிதி தலைமை வகித்தார். நகர வர்த்த கர் கழகத் தலைவரும், பெற்றோர் ஆசிரியர் கழக பொரு ளாளருமான ஆர்.பி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.  தேசிய மாணவர் படை திட்ட அலுவலர் சத்தியநாதன் தலை மையில் மாணவர்கள், கார்கில் போரின் போது உயிர்நீத்த படை வீரர்களுக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். உதவி தலைமை ஆசிரியர் கே.சோழபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  இதை போல பேராவூரணி கோகனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம் சார்பில் உடையநாடு- வீரியன்கோட்டை ராஜ ராஜன் பள்ளியில் நடைபெற்ற கார்கில் வெற்றி தின நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் ஆர்.மனோன்மணி ஜெய்சங்கர் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் பாலமுருகன் வரவேற்றார். லயன்ஸ் சங்க தலைவர் எம்.நீலகண்டன், செயலாளர் வி. ஜெய்சங்கர், பொருளாளர் எஸ்.மைதீன் பிச்சை, சங்க நிர்வாக அலுவலர் ஜெ.பிரேம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்த னர். நிகழ்ச்சியில் கார்கில் போரின் போது உயிர்த் தியாகம் செய்த வீரர்களின் தியாகத்தை போற்றும் விதமாக மெழுகு வர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

;