தஞ்சாவூர், ஜூலை 15- தமிழக முன்னாள் முதலமைச்சர், பெருந்தலைவர் காமரா ஜரின் 118-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, பேராவூரணி ஆவணம் சாலை முக்கத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில், காம ராஜரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து கொடி யேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சி க்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சிங்காரம் தலைமை வகித்தார். திருச்சிற்றம்பலத்தில் ஏசிசி மாரி முத்து தலைமையிலும், மல்லிபட்டினத்தில் கமால் பாட்சா தலைமையிலும் படத்திற்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர்.
அரசுப் பள்ளி
.தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், காமராஜர் 118-வது பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக புதன்கிழமை கொண்டா டப்பட்டது. பள்ளித் தலைமை ஆசிரியர் சி.சுகுணா தலைமை வகித்தார். பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலை வரும், சட்டமன்ற உறுப்பினருமான மா.கோவிந்தராசு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு சத்துணவு உலர் பொருட்கள் மற்றும் மாணவிகளுக்கு விலையில்லா பாட புத்தக ங்கள் வழங்கியும், 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு மடிக்கணினியில் பாடங்களை வீடியோ பதிவேற்றம் செய்வதை தொடங்கி வைத்தும் பேசினார்