tamilnadu

img

வீடு தேடிச் சென்று இலவச மருத்துவ சிகிச்சை

தஞ்சாவூர், ஜூன் 2- தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் புதுமனைத் தெருவைச் சேர்ந்தவர் ஏ.சேக் அப்துல் காதர், அதிராம்பட்டி னம் காதிர் முகைதீன் கல்லுாரியில் கணினி அறிவியல் துறைத் தலைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரியாஸா பேகம். இவர்களது மகன் ஜியாவூர் ரஹ்மான் (25). இவர், கடந்த 2018ல் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில், எம்.பி.பி.எஸ்., படிப்பை முடித்தார்.  தற்போது முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வில் வெற்றி பெற்று உள்ளார். தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தற்காலிகமாக பணி யாற்றி வந்தார். இந்நிலையில், கொரோனா ஊரடங்கை தொடர்ந்து ஜியாவுர் ரஹ்மான், அப்பகுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்ட ஏழை மக்கள், முதியோருக்கு பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினார். இதற்காக எவ்வித மருத்துவக் கட்டணமும் வசூலிக்கவில்லை.  மிகவும் உடல்நலம் பாதிக்கப்பட்ட முதியவர்களின் வீடுக ளுக்கு தேடிச் சென்று சிகிச்சை அளித்தார். இதுவரை 500 க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளித்துள்ளார். கொரோனா அச்சம் காரணமாக மருத்துவ மனையில் வைத்தே சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் தயங்கிய நேரத்தில் என் வீட்டில் வைத்து சிகிச்சை அளிக்க ஒத்துழைப்பு வழங்கிய என் பெற்றோர்களை மறக்க முடியாது என ஜியாவுர் ரஹ்மான் தெரிவித்தார்.