tamilnadu

img

டெல்டா மாவட்டங்களைப் பாதிக்கும் மேட்டூர் உபரிநீர் திட்டத்தை கைவிடுக... தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....

தஞ்சாவூர்:
மேட்டூர் அணையிலிருந்து உபரிநீரை சேலம் மாவட்டத்துக்கு பயன்படுத்தும் வகையில், காவிரி - சரபங்கா நீரேற்று திட்டம் அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த திட்டத்தால் காவிரிநீரை நம்பியுள்ள டெல்டா மாவட்டபாசனத்துக்கு தண்ணீர் பற்றாக்குறை யாக மாறி, விவசாயம் கேள்விக்குறியாகும். எனவே இத்திட்டத்தை கைவிடவேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடுவிவசாயிகள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தஞ்சாவூர் ரயிலடியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு, விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்டச்செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் துணைச் செயலாளர் ஞானமாணிக்கம், மாவட்ட துணைத் தலைவர் முனியாண்டி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எம்.மாலதி, மாவட்டக்குழு உறுப்பினர் சரவணன், மாநகரச் செயலாளர் என்.குருசாமி, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.அரவிந்தசாமி, மாதர் சங்கம் வசந்தி, மாற்றுத் திறனாளிகள் சங்கம் ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இதே கோரிக்கைகளை வலியுறுத்திபூதலூர், பேராவூரணி, பட்டுக் கோட்டை, ஒரத்தநாடு, உள்ளிட்ட அனைத்து ஒன்றியங்களிலும் தமிழ்நாடுவிவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட்டனர்.

கும்பகோணம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலாளர் கணேசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் சாமி.நடராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்னை.பாண்டியன், எம்.கண்ணன், கும்பகோணம் ஒன்றியச் செயலாளர் ஜேசுதாஸ், திருவிடைமருதூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் ஜீவபாரதி, நகரச் செயலாளர் செந்தில்குமார், ஒன்றியத் தலைவர் குணசேகரன், திருப்பனந்தாள் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

திருத்துறைப்பூண்டி
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக சரபங்கா நீரேற்று திட்டத்தை கைவிடக் கோரி நகரச் செயலாளர் ஜெயபிரகாஷ் தலைமையில் திருத்துறைப்பூண்டி கடைவீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாயிகள் சங்க மாவட்டப் பொருளாளர் சாமிநாதன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ஜி.ரகுராமன், ஒன்றியச் செயலாளர் டி.வி.காரல்மார்க்ஸ், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எம்.பி.கே.பாண்டியன், பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

நீடாமங்கலம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நீடாமங்கலத்தில், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வி.எஸ்.கலியபெருமாள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் ஒன்றியச் செயலாளர் சோம.ராஜமாணிக்கம், நகரச் செயலாளர் ஜோசப், விதொச செயலாளர் டி.அண்ணாதுரை, விவசாயிகள் சங்க தலைவர் வி.பூசாந்திரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;