headlines

img

கோத்ராவுக்கு பின்னால் நடந்ததை நாடு மறந்துவிடவில்லை

பிரதமர் நரேந்திர மோடியும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தேர்தல் பரப்புரையில் தொடர்ந்து இஸ்லாமிய மக்க ளுக்கு எதிராக விஷம் கக்கி வருகின்றனர். பத்தாண்டு காலம் இந்தியாவை ஆண்ட நரேந்திர மோடி தன்னுடைய ஆட்சியின் சாத னைகளாக எதையும் கூறாமல் மிகவும் தரம் தாழ்ந்த வகையில் பிரச்சாரம் செய்துவருகிறார்.

அவர் முன் வைத்த வளர்ச்சி நாயகன் உள்ளிட்ட முழக்கங்கள் அறுந்து தொங்குவதால் தங்களுடைய வளமையான வகுப்புவெறி ஆயு தத்தை கையிலெடுத்துள்ளனர். குஜராத் மாடல் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர் களின் மாய்மாலம் மக்களிடம் எடுபடவில்லை.  ஆனாலும் கூட தொடர்ந்து பொய்ப்பிரச்சாரத் தில் ஈடுபட்டு வருகிறார் பிரதமர் மோடி.

2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற  கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தின் பின்னணி குறித்து இன்னமும் கூட பலத்த சந்தேகங்கள் உள்ளன. ஆனால் கோத்ரா ரயில் எரிப்பைத் தொடர்ந்து நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் மாநில அரசின் ஆசியுடன் சிறு பான்மை இஸ்லாமிய மக்கள் கொன்று ஒழிக்கப் பட்டனர். அவர்களுக்கு இன்னமும் கூட நீதி கிடைக்கவில்லை. பில்கிஸ் பானு வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் நன்னடத்தை சான்றித ழுடன் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப் பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அவர்களை மீண்டும் சிறையிலடைக்க உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. மோடி-அமித்ஷா வகையறா ஒன்றிய ஆட்சிப்பொறுப்பையும் கைப்பற்றிய பிறகே பல்வேறு வழக்குகள் மிக மோசமான முறையில் முடித்து வைக்கப்பட்டன. இந்த நிலையில் பீகாரில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி கோத்ரா ரயில் எரிப்பு குற்றவாளி களை பாதுகாக்க முயன்றனர் என்று காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு  பிரசாத் யாதவை மறைமுகமாக குறிப்பிட்டுள் ளார். கோத்ரா ரயில் எரிப்பு குறித்து ரயில்வே அமைச்சகம் அமைத்த குழு வேறு வகை யான தகவலை கூறியது. ஆனாலும் அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்பட்டார்கள். 

ஆனால் அதன்பிறகு நடந்த சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறை கோரத் தாண்ட வத்தைக் கண்டு உலகமே அதிர்ச்சி அடைந்தது. இந்த வன்முறையில் அப்போதைய முதல்வர் மோடி மற்றும் மாநில உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரடியாக குற்றம்சாட்டப்பட்டனர். இதற்கு பல்வேறு ஆதாரங்களும் உள்ளன. ஆனால் அந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி கூட மர்ம மரணமடைந்தார். ஆனால் அதையெல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என்று ரயில் எரிப்பை மட்டும் மோடி இப்போது குறிப்பிடுகிறார். உண்மையில் குஜராத் மாடல் என்பது நீதியை திட்டமிட்டு சாகடித்ததுதான். ஆனால் மீண்டும் கோத்ரா நிகழ்வை மட்டும் பேசு வதன் மூலம் மக்களை பிளவுபடுத்திவிடலாம் என்று மோடி கருதுவது நடக்கப்போவதில்லை.

 

 

;