tamilnadu

img

ரேஷன் பொருள் குறைப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், செப்.10- ரேஷன் கடைகளில் மண் ணெண்ணெய் உள்ளிட்ட அத்தி யாவசிய பொருட்கள் அளவைக் குறைத்து வழங்குவதை கண்டித்து, அகில இந்திய விவசாயத் தொழிலா ளர் சங்கம், அனைத்து இந்திய ஜன நாயக மாதர் சங்கம் சார்பில் தஞ்சா வூர் பனகல் கட்டிடம் அருகில் செவ் வாய்க்கிழமை கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு, வி.தொ.ச மாவட்டச் செயலாளர் கே.பக்கிரி சாமி, மாதர் சங்க மாவட்டச் செயலா ளர் எஸ்.தமிழ்ச்செல்வி ஆகியோர் தலைமை வகித்தனர். மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.கலைச் செல்வி, வி.தொ.ச மாவட்டத் தலை வர் ஆர்.வாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்க மாநிலத் தலைவர் ஏ. லாசர் கண்டன உரையாற்றினார். வி.தொ.ச நிர்வாகிகள் வெ.ஜீவ குமார், கே.அபிமன்னன், சி.நாக ராஜ், ஏ.மாலதி, கே.மருதமுத்து, ஏ.செல்வராஜ், உமாபதி, எம்.சம்சுதீன், மாதர் சங்க நிர்வாகிகள் இ.வசந்தி, பி.கலைச்செல்வி, என்.வசந்தா, ஏ.மாலதி, கே.மலர்கொடி, டி.வசந்தி, சி.கலாவதி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் என்.வி.கண்ணன், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள் எம்.மாலதி, என்.சுரேஷ் குமார், மாநகரச் செயலாளர் என்.குருசாமி, மாநகரக்குழு அப்துல் நசீர், ராஜன், சாந்தா, வடிவேலன், ஞானமாணிக்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  “ரேஷன் கடைகளில் வழங்கும் மண்ணெண்ணெய் அளவை குறைத்ததைக் கைவிட வேண்டும். குடும்பத்திற்கு தலா 3 லிட்டர் வீதம் வழங்க வேண்டும். பாமாயில், சீனி அளவுகளை குறைக்காமல், அனைத்து குடும்ப அட்டைதாரர் களுக்கும் வழங்க வேண்டும். வறு மைக் கோட்டுக்கு கீழ், மேல் என தரம் பிரித்து, ரேஷன் பொருட்களை குறைத்து, ரேஷன் கடைகளை மூடும் முடிவைக் கைவிட வேண் டும். பொது விநியோகத் திட்ட குளறு படிகளைக் களைய வேண்டும்” என மத்திய, மாநில அரசுகளை வலி யுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.