tamilnadu

கொரோனா தடுப்பு விழிப்புணர்வுக் கூட்டம்

 தஞ்சாவூர், ஜூன் 14- தஞ்சாவூர் மாவட்டம், ஆவணத்தில் உள்ள பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், உள்ளாட்சி பிரதிநிதி களுக்கான, கொரோனா நோய்த் தடுப்பு விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் துர்கா செல்வி (ச.உ.தி) தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.தவ மணி (கி.ஊ) வரவேற்றார். ஒன்றிய தலை வர் சசிகலா ரவிசங்கர், வட்டாட்சியர் க. ஜெயலெட்சுமி முன்னிலை வகித்தனர். நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வட்டார மருத்துவ அலுவலர் வி. சௌந்தர்ராஜன் விளக்கிப் பேசினார். மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் மூர்த்தி, இலக்கியா உள்ளிட்டோர் கலந்து கொண் டனர். நிறைவாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீமகேஷ் நன்றி கூறினார்.