தஞ்சாவூர்: சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பூக்கொல்லையில் கொரானா நோய்த் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் ஒன்றியப் பெருந்தலைவர் மு.கி.முத்துமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. பேராவூரணி வட்டாட்சியர் க.ஜெயலெட்சுமி, ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் கை.கோவிந்தராஜன், ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராமலிங்கம் , நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார். கூட்டத்தில், பேராவூரணி காவல்துறை உதவி ஆய்வாளர் இல.அருள்குமார், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஊராட்சிச் செயலர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் முடுக்கி விடப்பட்டுள்ளன . பயணியர் நிழற்குடைகள், கடைத்தெருக்கள், வாகனங்களின் கைப்பிடிகள், பேருந்துகள், வங்கிகள், பொது இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.