tamilnadu

img

பாரதியார் பிறந்த நாள் விழா

பொன்னமராவதி: புதுக்கோட்டை பொன்னமராவதி வலையபட்டி சிதம்பரம் மெட்ரிக்குலே சன் மேல்நிலைப்பள்ளியில் மகாகவி பாரதியார் 138 ஆவது பிறந்த நாள் விழா நடை பெற்றது. விழாவிற்கு பள்ளி முதல்வர் வே.முருகேசன் தலைமையேற்றார். தனி அலுவலர் நெ.இரா.சந்திரன் வரவேற்றார். பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் அலங்கரிக்கப்பட்ட பாரதியார் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். மேலும் ஆசிரியர்களும், மாணவர்களும் பாரதியார் குறித்து விளக்கவுரையாற்றினர். விழாவில் துணை முதல்வர்கள் கி.வைதேகி, க.கலைமதி மற்றும் ஆசிரியர்கள், மாணவர் கள், பெற்றோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை தமிழ்த்துறை ஆசிரியர்கள் செய்திருந்தனர்.