tamilnadu

திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு நிபந்தனை ஜாமீன்

 கும்பகோணம், ஜூலை 23-  தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா திருப்ப னந்தாள் பகுதியில் ஜூன் ஆறாம் தேதி நடந்த பொதுக் கூட்டத்தில் திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் தஞ்சையை ஆண்ட மன்னர் ராஜராஜ சோழனை பற்றி தவறான கருத்து தெரிவித்ததாகவும், பொதுமக்கள் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாகவும் திருப்பனந்தாள் காவல்துறையினரால் ஜூன் 11 ஆம் தேதி ரஞ்சித் மீது வழக்கு தொடரப்பட்டது.  அவ்வழக்கு பா.ரஞ்சித் சார்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஜூன் 25-ஆம் தேதி ஜாமீன் கேட்டு மனு செய்த னர். அப்போது நீதிபதி, ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். வழக்கு சம்பந்தமான விளக்கங்களை கும்பகோணம் நீதி மன்றத்தில் நேரில் ஆஜராகி சமர்ப்பிக்குமாறு உத்தர விட்டது. அதன்படி செவ்வாய் காலை கும்பகோணம் நீதி மன்றத்தில் பா.ரஞ்சித் நேரில் நீதிபதியிடம் பிரமாண பத்தி ரங்களையும், ஆவணங்களையும் சமர்ப்பித்து ஆஜரானார்.

;