தஞ்சாவூர், ஆக.14- பேராவூரணி டாக்டர் ஜே.சி.குமரப்பா மேல்நிலைப் பள்ளி யில், இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் ஜெனிவா ஒப்பந்த நாள் விழா நடைபெற்றது. பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர் ஆர்.ஜெயபால் தலைமை வகித்தார். தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகளின் சங்க மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர். ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் எம். அன்னமேரி வரவேற்றார். தஞ்சை மாவட்ட ஒருங்கிணை ப்பாளர் மற்றும் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.பிச்சை மணி ஜெனிவா ஒப்பந்த நாள் பற்றி மாணவர்களிடம் விளக்கி பேசினார். மாநில பயிற்றுனர் கும்பகோணம் ஆடுதுறை செல்வராஜ், பல் மருத்துவர் எஸ்.ராஜசேகரன், மாவட்ட சுகாதார அலுவலர் எம்.எட்வின் ஆகியோர் சிறப்புரையாற்றி னர். இதில் அரசு மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, நடு நிலைப்பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்ட னர். மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் ப.சேகர் நன்றி கூறினார். மாற்று