tamilnadu

img

ஆட்சியர் உத்தரவுப்படி ரூ.385 சம்பளம் வழங்கக்கோரி தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், ஜன.7- திருவிடைமருதூர், ஆடுதுறை, திருபுவனம் உள்ளிட்ட ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் ஆண்கள்- பெண்கள் என ஏராளமான தூய்மை காவல் பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு முழுமையாக ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளில்  குப்பைகளை அள்ளும் பணி மற்றும் சுகாதார மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தஞ்சை மாவட்ட சிஐடியு தொழிற்சங்க முயற்சியால் மாவட்ட ஆட்சியரிடம் தூய்மை காவல் பணியாளர்களுக்கு உரிய சம்பளம் வழங்க கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் முந்தைய மாவட்ட ஆட்சியர் தூய்மை காவல் பணியாளர்களுக்கு ரூபாய் 385  சம்பளம் வழங்க உத்தரவிட்டார். ஆனால் இப்பகுதியில் தூய்மை காவல் பணியாளர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்ட சம்பளம் வழங்குவ தில்லை.   ஆகையால் தூய்மை காவல்  பணியாளர்களுக்கு ரூபாய் 385 சம்பளம் வழங்கிட கோரி திருவிடை மருதூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் ஜீவபாரதி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால் கோரிக்கை விளக்க உரை ஆற்றி னார். மாவட்டக்குழு உறுப்பி னர் என்.பி. நாகேந்திரன், பக்கிரி சாமி, சொக்கலிங்கம், மாற்றுத்திற னாளிகள் சங்க மாநில சிறப்பு அழைப்பாளர் வாசுதேவன் மற்றும் சிஐடியு தூய்மை காவல் பணியா ளர்கள் சங்க பொறுப்பாளர்கள் திருபுவனம் சித்திரா, ஆடுதுறை லதா, திருவிடைமருதூர் கவிதா, ஷீலா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிறைவாக திரு விடைமருதூர் வட்டாட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவினை கொடுத்தனர்.

;