tamilnadu

தேர்தல் முடிந்தவுடன் அதிர்ச்சி தகவல் டெல்டா மாவட்டத்தில் 10 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் எம்.செல்வராசு கண்டனம்

திருவாரூர், ஏப்.23- டெல்டா மாவட்டத்தில் 10 இடங்களில் ஹைட்ரோ கார்பன் ஆழ்துளை அமைக்கும் திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ள மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் எம்.செல்வராசு கண்டனம் தெரிவித்துள்ளார். திருவாரூரில் அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:காவிரி பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசும், பெட்ரோலிய அமைச்சகமும் குதிரை வேகத்தில் முயற்சிக்கிறது. ஏற்கனவே காவிரி நீரின்றி குளம்,குட்டை, ஏரிகள் காய்ந்து வெடித்து கிடக்கும் டெல்டா மாவட்டத்தை விவசாயிகள் விவசாயத்தில் நம்பிக்கையிழந்த சூழலில் தங்களது விவசாயத்தை நேரடி விதைப்பு என்ற நிலைக்குதள்ளப்பட்டுள்ளனர். தற்போது “வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவது போல்” டெல்டா மாவட்டத்தை மேலும் பாலைவனமாக்கும் திட்டத்தினை ஓஎன்ஜிசி வேதாந்தா குழுமத்திடம் மீத்தேன் எடுப்பதற்கான ஆழ்துளை தோண்டுவதற்கு அனுமதி அளித்துள்ளனர் என்ற செய்தி மிகுந்த கண்டனத்திற்குரியது. தற்பொழுது தேர்தலையொட்டி இத்திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என்று கூறியமத்திய மோடி அரசு தேர்தல் முடிந்த மறுதினமே ஓஎன்ஜிசி நிறுவனத்தின் மூலம் 10 இடங்களில் ஹைட்ரோ கார்பன் ஆழ்துளை கிணறு அமைக்கலாம் என்ற ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளதாக தொலைக்காட்சி மற்றும்பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது மிகுந்த கண்டனத்திற்குரியது. டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வை சீரழிக்கும் செயலாகும். இம்மண்ணில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஒரு அழ்துளைக் கிணற்றைக்கூட அமைக்கவிட மாட்டோம். அமைதியாக வாழும்மக்களின் அமைதியை சீர்குலைக் கும் ஓஎன்ஜிசியை வண்மையாக கண்டிக்கின்றோம் என தெரிவித் துள்ளார்.

;