tamilnadu

img

தனித்துவமிக்க மாணவர்களை உருவாக்கும் தன்னம்பிக்கை பள்ளி பேராவூரணி மூவேந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் பெருமிதம் 

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே செங்கமங்கலம் அம்மையாண்டி கிராமத்தில் அமைந்துள்ள மூவேந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மூவேந்தர் அறக்கட்டளை மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.  இங்கு சிறிய பள்ளியாக உருவாகி இப்போது ஆலமரம் போல் விரிவடைந்து செயல்பட்டுவருகிறது. அறக்கட்டளைத் தலைவராக வழக்கறிஞர் லயன் வி.ஏ.டி.சாமியப்பன் உள்ளார்.  எஸ்.கே.சிதம்பரம் செயலாளராகவும் பி.பாலசுப்ரமணியன் பொருளாளராகவும், அறங்காவலர்களாக லயன் இ.பி. ஏகாம்பரம், ஆர்.வேலுச்சாமி, என்.அசோக் குமார், வி.சின்னத்தம்பி, வி.வி.ரவிச்சந்திரன், டி.கோவிந்தராஜ், எஸ்.ராஜசேகர், எஸ்.ரவிச்சந்திரன், வி.சக்கரவர்த்தி செந்தில்குமார், லயன் கே.சுப்பிரமணியன், என்.சோமசுந்தரம், கே.ஆர்.கே.வி.நெடுமாறன், எம்.வினோத் ஆகியோர் பள்ளி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆசிரியர்களைக் கொண்டு வந்து மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் கற்றல், கற்பித்தல் பணி, நீட் தேர்வு மற்றும் ஜெஇஇ நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.  தற்போது 2500க்கும் மேற்பட்ட மாணவர்களின் சரணாலயமாக உள்ள மூவேந்தர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் அறிவை பட்டை தீட்டி, நல்லொழுக்கம் உள்ளவர்களாக உருவாக்கி வருகிறது. இப்பள்ளியை வெற்றிப் பாதையில் வழிநடத்தும் அறக்கட்டளையின் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் அறங்காவலர்கள், பள்ளியின் முதல்வர், நிர்வாக அலுவலர், ஆசிரியர்கள், ஆசிரியைகள் பள்ளியின் வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக உள்ளனர்.  மாணவர்களிடம் ஊக்கத்தை ஏற்படுத்தி அவர்களை வெற்றி பெறச்செய்து பெற்றோர்களின் கனவுகளை நனவாக்கும் விதமாக பள்ளி செயல்பட்டு வருகிறது. மேலும் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு குறைவான கட்டணத்தையே பெற்றுக்கொண்டு, சிறந்த கல்வி அளித்து அவர்களை சமுதாயத்தின் சிறந்த மாணவர்களாக முன் நிறுத்துவதில் மிகுந்த அக்கறை கொண்டு கல்விச்சேவை பணியை கடந்த 35 ஆண்டுகளாக பின்தங்கிய பகுதியான இப்பகுதியில் செய்து வருகிறார்கள்.  மேலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி மட்டுமின்றி இசை, கராத்தே, ஓவியம், விளையாட்டு, யோகா பயிற்சி, உடற்பயிற்சி, வாழும் கலை பயிற்சி ஆகியவை கற்றுத் தரப்படுகிறது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கையெழுத்து பயிற்சி, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இலக்கணப் பிழையின்றி பேசவும், எழுதவும் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. மாணவர்களின் ஆளுமைத் திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.  நாட்டு நலப்பணித் திட்டம், இளையோர் செஞ்சிலுவைத் திட்டம்,  தேசிய பசுமைப் படை போன்ற அமைப்புகள் எம் பள்ளியில் செயல்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, சிசிடிவி மூலம் கண்காணிப்பு மற்றும் ஆண், பெண் இருபாலருக்கும் பாதுகாப்புடன் கூடிய விடுதி வசதியும் உள்ளது.  எம் பள்ளி மாணவர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் மாவட்ட மண்டல மாநில அளவில் பங்கேற்று பல வெற்றிகளை பெற்று சாதனை புரிந்துள்ளனர். நூற்றுக்கணக்கான மருத்துவ, பொறியியல் மற்றும் பல்துறை மாணவர்களை உருவாக்கி சாதனை படைத்தது எமது பள்ளி என்றார் பள்ளித் தாளாளரும் அறக்கட்டளை தலைவருமான வழக்கறிஞர் லயன் வி.ஏ.டி.சாமியப்பன்.

 

;