தஞ்சாவூர், ஆக.14- தமிழகம் முழுவதும் ஏரி, ஆறு குளங்கள் தூர் வாரப்பட்டு வருகின்றன. தஞ்சை மாநகராட்சியில் உள்ள அனைத்து நீர்நி லைகளும் முழு வீச்சில் தூர்வாரப்பட்டு வருகின்றன. இதில் மாநகராட்சி நிர்வாகத்தோடு பொதுமக்கள், தன்னார்வ லர்கள், ரோட்டரி சங்கத்தினரும் சேர்ந்து தூர்வாரும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த தஞ்சை மேம்பாலம்குளம் தூர்வாரப்பட்டது. இந்த பணியை மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் பார்வை யிட்டார். தூர்வாரும் பணிக்கான நிதியை மாநகராட்சியில் பதிவு பெற்ற பொறியாளர் சங்கத்தினர் சுமார் ரூ.2 லட்சம் அளவு க்கு நிதி திரட்டி செய்தனர். இதையடுத்து பொக்லைன் இயந்திரம் வரவழை க்கப்பட்டு மேம்பாலம் குளம் தூர்வாரப்பட்டு, புதர்கள் குப்பைகள் அகற்றப்பட்டன. குளத்தின் கரைகள் பலப்படு த்தப்பட்டன. இரு தினங்களுக்குள் பணி முடியும் என அதிகாரி கள் தெரிவித்தனர். இதுகுறித்து ஆணையர் ஜானகி ரவீந்திரன் கூறுகையில், தஞ்சை மாநகராட்சியில் 45 நீர் நிலைகள் உள்ளன. இதில் அனைத்து நீர்நிலைகளும் ஒவ்வொன்றாக தூர்வாரப்பட்டு மீட்கப்பட்டு வருகின்றன. பருவமழையின் போது தண்ணீர் வரும் நேரத்தில் அனைத்து குளங்களிலும் மழை நீர் சேமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.