tamilnadu

img

உலகத் துப்பாக்கி சுடுதல் தமிழக வீராங்கனை இளவேனிலுக்கு தங்கம்

உலகத் துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் சீனாவின் புடியான் நகரில்  நடைபெற்று வருகிறது. 

மகளிர் 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் 250.8 புள்ளிகள் பெற்று  தமிழக வீராங்கனை இளவேனில் முதலிடத்துடன் தங்கம் வென்று அசத்தியுள்ளார். 20 வயதான இள வேனில் நடப்பாண்டு சர்வதேச துப்பாக்கி சுடுதலில் பெறும் இரண்டாவது தங்கப்பதக்கம் இதுவாகும். இந்தியாவின் இளம் வீராங்கனை மனு பாக்கர் (வயது 17) 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில்  244.7 புள்ளிகளுடன் தங்கம் பெற்றதுடன் மட்டுமல்லாமல் ஜூனியர் பிரிவில் புதிய உலக சாதனையையும் படைத்துள்ளார். மேலும் ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில்  இந்திய வீரர் பன்வார் திவ்யன்ஷ் சிங் (வயது 17) 250.1 புள்ளிகளுடன் தங்கப்பதக்கம் வென்றார்.