tamilnadu

img

ஊக்க மருந்து தாக்குதலை ரஷ்யா சமாளிக்குமா? -சதீஸ் முருகேசன்

சண்டே ஸ்பெஷல்...

உலகின் மிகப்பெரிய நாடான ரஷ்யா விளையாட்டுத் துறையில் தனி செல்வாக்கு உடை யது. சோவியத் யூனியனில் இருந்த பொழுதும் சரி, பிரிந்த பொழுதும் சரி இன்று வரை விளையாட்டு உலகில் ரஷ்யா தனிக் காட்டு ராஜாவாக வலம் வருகிறது.   குளிர்கால ஒலிம்பிக், கோடைக் கால ஒலிம்பிக் என இரண்டிலும் ஒரே மாதிரியான சீற்றத்துடன் பதக்க வேட்டை நிகழ்த்தும் ரஷ்யாவைக் கண்டு உலக நாடுகள் கடும் பொறாமையில் இருப்பது வழக்கமான விஷயம் தான். கேளிக்கை பிரிவான விளை யாட்டுத் துறையில் பொறாமை நிகழ்வு சகஜம் தான் என்றாலும், அதை யுத் தம் செய்யும் வகையில் அரங்கேற்றி னால் நியாயமாகுமா?  ரஷ்ய வீரர்களின் வெற்றி நடை யைச் சீர்குலைக்கும் வகையில், அமெ ரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகள் ஒலிம்பிக் சங்கத்தில் தமக்கு இருக் கும் செல்வாக்கைப் பயன்படுத்தி ஊக்கமருந்து என்னும் ஆயுதம் மூலம் 2014-ஆம் ஆண்டு முதல் இன்று வரை ரஷ்ய விளையாட்டு உலகம் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

என்ன பிரச்சனை? 

சோவியத் யூனியன் பிரிந்த பின் ரஷ்யா நடத்தும் முதல் ஒலிம்பிக் தொட ரான  சோச்சி குளிர்கால ஒலிம்பிக் தொட ரில் உள்ளூர் மக்களின் பேராதரவுடன் 11 தங்கம் உட்பட 29 பதக்கங்களை வென்று முதலிடம் பிடித்து அசத்தி யது. கோடை,குளிர் என இரண்டு ஒலிம்பிக்கிலும் சுமாராக பதக்கம் குவிக்கும் (அதாவது டாப் 5-ற்குள் தான்) ரஷ்யா எப்படி முதலிடம் பிடித் தது எனப் பொறாமை எண்ணத்துடன் உலக நாடுகள் நகத்தைக் கடித்துக் கொண்டிருந்தன.  2014-ஆம் ஆண்டு இறுதியில் ஏஆர்டி என்ற ஜெர்மன் செய்தி நிறு வனம் ரஷ்ய விளையாட்டுத் துறையில் இருக்கும் ஊழல்கள், ஊக்கமருந்து குறித்து ஆதாரத்துடன் செய்தி வெளி யிட்டது. இது வெறும் செய்தி தான் என உலக நாடுகள் கண்டுகொள்ள வில்லை. ஆனால் முந்திரிக்கொட்டை யை போல முந்திக்கொண்ட ரஷ்யா வின் ஊக்கமருந்து தடுப்பு பிரிவு முன் னாள் உறுப்பினர் விட்டாலி ஸ்டெப்ப னொவ் திடீரென தலைமறைவானார். ஏஆர்டி செய்தி மற்றும் தலைமறைவு ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு உலக ஊக்கமருந்து தடுப்பு ஆணை யம் களத்தில் குதிக்க 100-க்கும் அதி கமான ரஷ்ய வீரர்கள் ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதியாகியது.    

மேலும் 2016-ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் தொடரிலும் ரஷ்ய வீரர்கள் பலர் சோதனையில் தோல்வியடை யச் சர்வதேச ஒலிம்பிக் நிர்வாகம் ரஷ்யாவைக் கடுமையாக விமர்சித் தது. தொடர்ந்து பாரா ஒலிம்பிக் தொடர், உலக குத்துச்சண்டை தொடரில் பங்கேற்கத் தடை போன்ற முக்கிய மான தடைகளைப் பெற்றாலும் ரஷ்ய அரசு இதனைக் கண்டுகொள்ளாதது போன்று இருந்தது. 2018-ஆம் ஆண்டு ஆடவர் உலகக்கோப்பை கால்பந்து தொடரை ரஷ்யா நடத்திய பொழுதி லும் பிபாவின் ஊக்கமருந்து தொடர் பான புகார் காற்றில் பறந்தது.  இதனால் கொதித்தெழுந்த உலக ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் ஒலிம்பிக் தொடரில் பங்கேற்க ரஷ்யா விற்கு 4 ஆண்டுகள் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.  இதனால் ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்யாவின் கொடி மற்றும் தேசிய கீதம் அடுத்த நான்கு ஆண்டுகளுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. ரஷ்ய வீரர்/வீராங்கனை என்ற பெயரின் அடிப்படையில் யாரும் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள முடி யாது. தனி நபர் ஒலிம்பிக் கொடி களில் பங்கேற்கலாம்.

அரசினால் எல்லாம் போச்சு 

ரஷ்ய விளையாட்டுத் துறை யின் இந்த பரிதாபமான நிலைக்குக் காரணம் அரசு தான்.பதக்கம் மற்றும் செல்வாக்கு பெற ரஷ்ய அர சின் செயல்பாடு விளையாட்டுத்துறை யில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி யுள்ளது. ஊக்க மருந்து ஆணையம் எச்சரித்த பொழுது இந்திய அரசு போன்று விளையாட்டு வீரர்களைச் சோதனை அல்லது நீக்கிருந்தால் ரஷ்யா வீரர்களுக்கு இந்த நிலைமை உருவாகியிருக்காது. சிறந்த உடல் வாகுகளைப் பெற்றுள்ள ரஷ்ய இளசுகளுக்கு இனி விளையாட்டு மீது எப்படி ஆசை வரும். ஒரு சொட்டு ஊக்க மருந்தால் இன்று நாடே அவ மானம் என்ற வெள்ளத்தில் சிக்கி யுள்ளது. இனி மேலாவது ரஷ்ய அரசு தனது கடமையை உணருமா என் பதை பொறுத்திருந்து பார்ப்போம்.